/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தாறுமாறாக பஸ் ஓட்டிய போதை டிரைவருக்கு உதை
/
தாறுமாறாக பஸ் ஓட்டிய போதை டிரைவருக்கு உதை
ADDED : ஜூன் 15, 2025 01:25 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், தனியார் பஸ் டிரைவர் மது போதையில் தாறுமாறாக பஸ் ஓட்டி சென்றதால், பொதுமக்கள் அவரை சரிமாரியாக தாக்கினர்.
புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் நோக்கி டிரைவர் சரவணன், 46, தனியார் பஸ்சை, நேற்று ஓட்டி சென்றுள்ளார்.
பஸ் தாறுமாறாக ஓடிய நிலையில், திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பைக்கில் சாலை ஓரமாக சென்ற நபர் மீது பஸ் மோதியதில், அவர் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
தனியார் பஸ்சை வழிமறித்து, சரவணனிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, மது போதையில், அவர் பஸ்சை இயக்கியது தெரியவந்தது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், சரவணனை சரிமாரியாக தாக்கினர். அவருக்கு ஆதரவாக வந்த நடத்துநர் பிரகாஷ் என்பவருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
இதனிடையே, 'தனியார் பஸ் உரிமையாளர் நேரில் வந்தால் தான் பஸ்சை இயக்க விடுவோம்' எனக்கூறி, பஸ்சை மக்கள் சிறை பிடித்தனர். டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக திருக்கோகர்ணம் போலீசார் கூறியதால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்தனர்.