/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியருக்கு 'போக்சோ'
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியருக்கு 'போக்சோ'
ADDED : ஜன 05, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோகர், 36. இவர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் தாய் புகார்படி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மனோகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

