/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த 3 நாகப்பாம்புகள்
/
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த 3 நாகப்பாம்புகள்
ADDED : ஜூலை 12, 2024 04:13 AM
திருவாடானை: ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மூன்று நாகப் பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி செயலர் செந்தில்நாதன் அலுவலகத்தை திறந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.
அப்போது நான்கு முதல் ஐந்து அடி நீளமுள்ள மூன்று நாகப்பாம்புகள் அலுவலகத்திற்குள் புகுந்தது.
இதை பார்த்ததும் செந்தில் நாதன், திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி, கருவிகள் உதவியுடன் பாம்புகளை உயிருடன் பிடித்தனர். அதை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாம்பை உயிருடன் விட்டனர்.