/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் குருபூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
/
உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் குருபூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் குருபூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் குருபூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
ADDED : ஜூலை 10, 2024 05:05 AM
உத்தரகோசமங்கை ; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
கோயில் வளாகத்தில் வலது புறத்தில் அக்னி தீர்த்த தெப்பக்குளம் அருகே மாணிக்கவாசகப் பெருமானுக்கு சன்னதி உள்ளது. ஆனி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
பாண்டிய மன்னன் சபையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்கவாசகர். அப்போது வரி வசூலித்த பணத்தை கொண்டு குதிரை வாங்க வைத்திருந்த பணத்தில் ஆவுடையார் கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். இந்நேரம் சிவபெருமானை நினைத்து உருகி திருவாசகம் பாடலை பாடினார்.
ஒவ்வொரு சிவன் கோயிலிலும் மாணிக்கவாசகர் இயற்றிய பொன்னுாஞ்சல் பள்ளியறை பூஜையில் பாடப்படுகிறது. அதில் உத்தரகோசமங்கையின் சிறப்பையும் கூறுகிறார்.
நேற்று காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மூலவர் மற்றும் உற்ஸவர் மாணிக்கவாசகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை, பாராயணம், திருவாசகம், திருவெம்பாவை பாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா மந்திர் நிர்வாகி சிவராம் ஆகியோர் செய்திருந்தனர்.