ADDED : ஜூலை 12, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப் பள்ளியில் பயிலும் 11 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி பனைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.
போட்டியை மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலர் சூசை துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் முத்துமாரி, மேலாண்மைக் குழு கல்வியாளர் நத்தர்ஷா முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தலா 3 மாணவர்கள், மாணவிகள் மண்டபம் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்னர்.
இடைநிலை ஆசிரியர், சதுரங்கப் பயிற்சியாளர் மணிகண்டன், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.