/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 12, 2024 04:24 AM
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இரண்டாம் கட்டமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கினார். அதன்படி நேற்று பாம்பன் ஊராட்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் முகாம் துவங்கியது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மக்களிடம் இருந்து ஏராளமான மனுக்களை பெற்றார். பின் 267 பேருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள விலையில்லா வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
இந்த முகாம் நாளை (ஜூலை 13) வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் 76 முகாம் நடக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர்கள் அகிலா, குயின்மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.