/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்புல்நாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின்கம்பங்கள்
/
பாம்புல்நாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின்கம்பங்கள்
ADDED : ஜூலை 15, 2024 04:05 AM
கமுதி : -கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தால் மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது வீடுகளுக்கு அருகே உள்ள மின்கம்பங்கள் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் பலத்த காற்று மழையின்போது கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளாக மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மின்வாரியத்தினர் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.