/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவுதியில் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டு வர உதவிய த.மு.மு.க., வினர்

ADDED : ஜூலை 12, 2024 04:20 AM
கீழக்கரை: சவுதியில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய த.மு.மு.க.,வினரின் செயல் அப்பகுதியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
கீழக்கரை அருகே வடக்கு மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் 45. கூலித் தொழிலாளியான இவர் சவுதியில் பணியில் இருந்த போது மாரடைப்பால் கடந்த ஜூன் 21ல் இறந்தார்.
ஐயப்பன் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி ஜெயராணி, பேரையூர் ஊராட்சி துணைத் தலைவர் சுலைமான் மூலம் கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில் த.மு.மு.க., மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மாநில துணைப் பொது செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., சவுதி மண்டல தலைவர் மீமிசல் நுார் முகமது, துணைச் செயலாளர் சுலைமான் ஆகியோர் மூலம் அவரது உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தது.
சவுதியில் இறந்த ஐயப்பன் உடலை அவர் சொந்த ஊரான வடக்கு மல்லல் கிராமத்திற்கு கொண்டு வந்து கிராம மக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.