நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா நடந்தது. ஆடி முதல் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. பக்தர்கள் கருப்புசாமி வேடமணிந்து கிராமத்தின் முக்கிய வீதியில் ஊர்வலமாக வந்து திரியாட்டம் ஆடி அருள்வாக்கு கூறினார்.
கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல், மாலை முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.