/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு: 2 கிலோ ரூ.100
/
மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு: 2 கிலோ ரூ.100
மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு: 2 கிலோ ரூ.100
மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு: 2 கிலோ ரூ.100
ADDED : ஜூலை 12, 2024 04:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் உள்ளூர் மற்றும் வெளியூர்களிருந்து சந்தைக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருவதால் விலை குறைந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன் கிலோ ரூ.80க்கு விற்றது தற்சமயம் 2 கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம், ரெகுநாதபுரம், சர்க்கரகோட்டை, பெரியபட்டினம், பட்டணம்காத்தான், தேவிபட்டினம், கீழக்கரை ரோடு, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி நடக்கிறது. ஏப்., மே, ஜூன் வரை மாம்பழம் விற்பனை நடக்கிறது.
தற்போது சீசனை முன்னிட்டு மேற்கண்ட இடங்களில் மா விளைச்சல் உள்ளது. இவற்றை சந்தையில் கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கும் மொத்த வியாபாரிகள் விற்கின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாம்பழம் கிலோ ரூ.60 முதல் ரூ.80க்கு விற்றது.
தற்போது உள்ளூர் மட்டுமின்றி தேனி மாவட்டம் பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் மாம்பழங்களும் விற்பனை வருவதால் விலை குறைந்துள்ளது.
பாலாமணி, கசாலட்டு 2 கிலோ ரூ.100, சப்போட்டா 1.5 கிலோ ரூ.100க்கு விற்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என வியாபாரிகள் கூறினர்.