/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊட்டமேற்றிய தொழு உரம் விவசாயிகளுக்குப் பயிற்சி
/
ஊட்டமேற்றிய தொழு உரம் விவசாயிகளுக்குப் பயிற்சி
ADDED : ஜூலை 15, 2024 04:23 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண்துறை சார்பில், புல்லங்குடி கிராமத்தில்ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அமர்லால் தலைமைவகித்தார். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் அரசுமானியங்கள், ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல் பற்றியும், அதன் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட உயிர் உரஉற்பத்தி மைய வேளாண் அலுவலர்கள் அம்பேத்குமார், பரத்குமார், வேளாண் விற்பனை, வணிகத்துறை அலுவலர் சபிதாபேகம்,தோட்டக்கலை உதவி அலுவலர் மோகனா, புல்லங்குடி ஊராட்சி தலைவர் முனியம்மாள், வேளாண் அலுவலர்கள்சித்திரச்செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ்குமார், கோசலாதேவி, விவசாயிகள் பங்கேற்றனர்.