ADDED : ஜூலை 25, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமை வகித்தார். உத்தரகோச மங்கை அரசு உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் மாணவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் பேசுகையில், தலைமைப் பொறுப்பின் பண்பையும் அதன் முக்கியத்துவத்தையும், சமுதாயத்திற்கு மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமையையும் பற்றி விளக்கமாக பேசினார். முதல்வர் இந்திராதேவி, ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் கோகிலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.