/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற குமரியேந்தல் மக்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 12, 2024 04:16 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குமரியேந்தல் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
காரேந்தல் ஊராட்சி குமரியேந்தல் ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஊரின் மையப்பகுதியில் இருந்து கிழக்கே சுடுகாட்டு பாதை உள்ளது. 60 ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர். தற்போது சிலர் பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
குறுகிய வழியாக உள்ளதால் வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. இறந்தவர்களின் உடல் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கலெக்டர் விசாரணை செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தார்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.