/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவு நேர ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 23, 2024 11:18 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவு நேர சில ஓட்டல்களில் முதல் நாள் விற்பனை ஆகாத உணவுகள் மற்றும் கெட்டுப் போன சால்னா அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான இரவு நேர பரோட்டோ ஸ்டால்கள், ஹோட்டல்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சில ஹோட்டல்களில் முதல் நாள் விற்பனையாகாத பரோட்டோ, இறைச்சி, சால்னாவை பிரிட்ஜில் வைத்து மறுநாள் தயார் செய்யப்படும் உணவுகளுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கெட்டுப்போன உணவுகளை உட்கொண்டு உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.மேலும் பெரும்பாலான ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சூடான உணவுப் பொருள்களுடன் பார்சல் செய்யப்படுவதாலும், உணவை உட்கொள்பவர்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இரவு நேர பரோட்டோ ஸ்டால்களை ஆய்வு செய்து உணவு தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதும், வாழை இலை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.