/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழ்நாடு ஊராட்சி செயலர் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
/
தமிழ்நாடு ஊராட்சி செயலர் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2024 05:25 AM

ராமநாதபுரம், : தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ஜான் போஸ்கோ தலைமை வகித்தார். மாநில மகளிரணி இணை செயலாளர் செந்தாமரை வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மகேஸ்வரன், இணை செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ஜெயபரதன், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர்தேனி குமரேசன், சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்யராஜ்ஆகியோர் பேசினர்.
ராமநாதபுரம் மாவட்ட தலைவராக முருகன், செயலாளராக முத்துராமலிங்கம், பொருளாளராக சிவசாமி, மாவட்டதலைமை நிலைய செயலாளராக பாக்யராஜ், அமைப்பு செயலாளராக முத்து வழிவிட்டான், மகளிரணி செயலாளராக கலைச்செல்வி.
செயற்குழு உறுப்பினர்களாக கண்ணன், மகளிரணி இணைசெயலாளர்களாக பொன்மணி, வெயில் மதி, ரமா பிரியா,மகளிரணிதுணை செயலாளராக நளினா தேவி,மாவட்ட இணை செயலாளர்களாக பெத்து காளை, ராஜிவ் காந்தி,மாவட்ட துணை செயலாளராகராமமுனி, மாவட்ட துணை தலைவர்கள் நரசிங்க மூர்த்தி, மால் மருகன், மங்களசாமி, வேல்முருகன், முத்துராமலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டி கூட்டம்: அதே நேரம் மாநில சங்கத்தால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் போட்டி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட தலைவராக என்.நாகேந்திரன், செயலாளராக ஜெயராமகிருஷ்ணன், பொருளாளராக ராஜ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளராக முனியசாமி தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றினர்.