/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் போலீசில் புகார் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்

ADDED : ஜூலை 12, 2024 04:10 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மர்ம நபர்கள் பள்ளியை சேதப்படுத்தி அசுத்தமாக்கிய விவகாரத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி பெற்றோரிடம் நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பெற்றோரை நேற்று பள்ளிக்கு அனுப்பினர்.
உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் படிக்கின்றனர். வார விடுமுறை முடிந்து ஜூலை 8ல் ஆசிரியர்கள் பள்ளியை திறந்த போது வகுப்பறையில் இருந்த சேர்கள், புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சேதப்படுத்தப்பட்டு மலம் கழித்து அசுத்தம் செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து பள்ளியை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்க முன்வராததால் மூன்று நாட்களாக பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நேற்று காலை தலைமை ஆசிரியர் மலைராஜ், திருப்பாலைக்குடி போலீசில் புகார் அளித்தார். நேற்று காலை 9:30 மணிக்கு பள்ளிக்குச் சென்ற மாவட்ட கல்வி அதிகாரி பிரின்ஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, பி.டி.ஓ., லட்சுமி ஆகியோர் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்தனர்.
தொடர்ந்து காலை 11:45 மணிக்கு மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர். பின்பு அதிகாரிகளிடம் பெற்றோர் விரைவில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை துவங்குவோம் என எச்சரித்தனர்.