/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கு பாஸ் இருந்தும் பஸ் வசதி இல்லை டி.எம்.கோட்டையில் அவல நிலை
/
பள்ளி மாணவர்களுக்கு பாஸ் இருந்தும் பஸ் வசதி இல்லை டி.எம்.கோட்டையில் அவல நிலை
பள்ளி மாணவர்களுக்கு பாஸ் இருந்தும் பஸ் வசதி இல்லை டி.எம்.கோட்டையில் அவல நிலை
பள்ளி மாணவர்களுக்கு பாஸ் இருந்தும் பஸ் வசதி இல்லை டி.எம்.கோட்டையில் அவல நிலை
ADDED : ஜூலை 14, 2024 05:18 AM
பெருநாழி, : டி.எம்.கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாஸ் இருந்தும் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பெருநாழி அருகே டி.எம்.கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
டி.கரிசல்குளம், கொண்டு நல்லான்பட்டி, வேப்பங்குளம், கட்டாலங்குளம், பெருநாழி, டி.குமாரபுரம், வீரமாச்சன்பட்டி, திம்மநாதபுரம், கீழ்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் டி.எம்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க வருகின்றனர்.
சாயல்குடி-பெருநாழி பிரதான ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் இணைப்பு ரோட்டில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
பெருநாழியில் இருந்து 6 கி.மீ.,லும், சாயல்குடியில் இருந்து 12 கி.மீ.,லும் பள்ளி உள்ள நிலையில் அரசு இலவச பஸ் பாஸ் மாணவர்களுக்கு வழங்கி உள்ளது.
ஆனால் அதை பயன்படுத்தி பயணிக்க அரசு டவுன் பஸ் இல்லை.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் டி.எம்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். அரசு வழங்கிய பஸ் பாஸ் இருந்தும் அவற்றை பயன்படுத்த வழியில்லாத நிலையில் மாணவர்கள் தனியார் பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் பயணிக்கின்றனர்.
போக்குவரத்திற்காக குறிப்பிட்ட தொகை செலவழிக்க வேண்டி உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்குச் சென்று வர வசதியாக காலை 8:30 மணி மற்றும் மாலை 5:00 மணி ஆகிய நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கினால் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கிராமப்புற மாணவர்கள் எளிதில் பயன்பெறுவார்கள் என்றனர்.