ADDED : ஜூலை 15, 2024 04:32 AM
ராமநாதபுரம், : -ஓ.என்.சி.ஜி., நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா துவங்கியது.
இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், சென்னை காவிரி படுகை நிறுவனத்தின் நிதியுதவியுடன் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்பீடு அறக்கட்டளை சார்பில் ஸ்வச்தா இரு வார விழாவை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ரெகுநாதபுரம், இருட்டூரணி, வாலாந்தரவை, பெருங்குளம் ஆகிய கிராமங்களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதன் தொடக்க விழா திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு சுற்றுச் சூழல் பொறியாளர் ஆனந்த நாராயணன் தலைமை வகித்தார்.
திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி, பி.டி.ஓ.,க்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், வனச்சரக அலுவலர் நித்தியகல்யாணி, திருப்புல்லாணி ஊராட்சித்தலைவி கஜேந்திரமாலா ஆகேயோர் முன்னிலை வகித்தனர்.
ஓ.என்.ஜி.சி., காரைக்கால் காவிரி அசட்ரிக் மேலாளர் தங்கமணி வரவேற்றார்.
ஸ்பீடு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் தேவராஜ் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து பேசினார்.
காவிரி படுகை சென்னை நிறுவனத்தின் மேலாளர்கள் ஆறுமுகம், மோகன்ராஜ், திருப்பதிவாசன், ரமேஷ், சேஷாத்திரி, காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் சிவசங்கர், சுபாஷ்சந்திரசேகர், திருப்புல்லானி எஸ்.ஐ., சிவசாமி ஆகியோர் பேசினர். திருப்புல்லானி ஊராட்சி துணைத்தலைவர் தாஹிராபீவி நன்றி கூறினார்.