/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பாலைக்குடி கடற்கரை ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
/
திருப்பாலைக்குடி கடற்கரை ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பாலைக்குடி கடற்கரை ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பாலைக்குடி கடற்கரை ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 18, 2024 10:37 PM

ஆர்.எஸ்.மங்கலம் : திருபாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர்.
கிழக்குக் கடற்கரை சாலையில் மீனவர் கிராமமான திருப்பாலைக்குடி அமைந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் ரோடுகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளன.
குறிப்பாக திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கடற்கரை செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர்.
மேலும் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்று திரும்பும் மீனவர்களும் சிரமத்துடன் சென்று வரும் நிலை உள்ளது.
திருப்பாலைக்குடி ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த கடற்கரை ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் வலியுறுத்தினர்.