sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் மழை குறைவால் வறண்ட நிலையில் 289 கண்மாய்கள் காலி; சாகுபடி துவக்கிய விவசாயிகள் மழைக்காக காத்திருப்பு

/

ராமநாதபுரத்தில் மழை குறைவால் வறண்ட நிலையில் 289 கண்மாய்கள் காலி; சாகுபடி துவக்கிய விவசாயிகள் மழைக்காக காத்திருப்பு

ராமநாதபுரத்தில் மழை குறைவால் வறண்ட நிலையில் 289 கண்மாய்கள் காலி; சாகுபடி துவக்கிய விவசாயிகள் மழைக்காக காத்திருப்பு

ராமநாதபுரத்தில் மழை குறைவால் வறண்ட நிலையில் 289 கண்மாய்கள் காலி; சாகுபடி துவக்கிய விவசாயிகள் மழைக்காக காத்திருப்பு


ADDED : செப் 11, 2025 06:02 AM

Google News

ADDED : செப் 11, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற் கொண்டுள்ளனர். மிளகாய் 1.15 லட்சம் ஏக்கர், சிறுதானியங்கள் 25 ஆயிரம் ஏக்கர், பயறுவகைகள் 10 ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்து 6000 ஏக்கரில் சாகுபடி செய்கின்றனர். ஆண்டு தோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக 827 மி.மீ., பெய்ய வேண்டும். இந்நிலையில் நடப்பு 2025ல் ஆக., வரை 255 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 639 கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறையில் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. குறிப்பாக பாசனத்திற்கு அதிகளவில் பயன்படும் வைகை வடிநில கோட்டத்தில் 498 கண்மாய்கள், குண்டாறு வடி நிலக்கோட்டத்தில் 141 கண்மாய்கள் என 639 கண்மாய்கள் உள்ளன.

இவற்றில் 10 கண்மாய்களில் 75 சதவீதம், 340 ல் 26 முதல் 50 சதவீதம், 241 கண்மாய்களில் 25 சதவீதற்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. 48 கண்மாய்கள் முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளது.

இருப்பினும் ராமநாதபுரம் பெரியகண்மாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கண்மாய்கள். ஊருணிகளில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், நயினார்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட பல இடங்களில் முதல் போக சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. இனி வரும் செப்., அக்., மாதங்களில் குறிப்பிடும் அளவிற்கு மழை பெய்தால் மட்டுமே முதல் போக சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம், செப்.11-

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கோடைமழை, தென் மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளதால் மாவட்டத்தில் 1763 கண்மாய்களில் 289 வறண்ட நிலையில் உள்ளன. சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us