/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாலுகா அலுவலகம் முன்பு 7 குடும்பத்தினர் தர்ணா
/
தாலுகா அலுவலகம் முன்பு 7 குடும்பத்தினர் தர்ணா
ADDED : மே 28, 2025 11:16 PM

திருவாடானை: திருவாடானை அருகே பனிச்சகுடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 17 குடும்பத்தில் ஏழு குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்துவதாக அந்த ஏழு குடும்பத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
இது சம்பந்தமாக எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நேற்று காலை அந்த ஏழு குடும்பத்தினர் திருவாடானை தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானை போலீசார் சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று (மே 30) இரு தரப்பினருடன் சமாதான கூட்டம் நடத்துவது என அலுவலர்கள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

