/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவ பெண்களுக்குபாசி வளர்ப்பு பயிற்சி
/
மீனவ பெண்களுக்குபாசி வளர்ப்பு பயிற்சி
ADDED : பிப் 01, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், --ராமேஸ்வரம் அருகே மண்டபம் முனைக்காடு கிராமத்தில் பெண்களுக்கு கடல் பாசி வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்டபம் முனைக்காடு கடற்கரை கிராமத்தில் நேற்று மகளிர் குழுவை சேர்ந்த 40 பேருக்கு கடல்பாசி வளர்ப்பு திட்ட மேலாளர் ஜெய்பிரகாஷ் ஆலோசனையில் கடல்பாசி வளர்ப்பு மற்றும் மருத்துவ முதலுதவி பயிற்சி, கடல்பாசியை சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சியாளர்கள் சகுந்தலா, சுகந்தி ஆகியோர் வழங்கினர்.
மண்டபம் வட்டார சுகாதாரக் கண்காணிப்பாளர் மகேந்திரன், மீனவ பெண்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமான மீனவ பெண்கள் கலந்து கொண்டு பயன்அடைந்தனர்.

