/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்து மீட்பு பணியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
/
விபத்து மீட்பு பணியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
ADDED : ஜன 14, 2024 04:10 AM
தொண்டி : தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ், சரக்கு ஆட்டோ நேருக்கு மோதிய விபத்தில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் துரிதமாக செயல்பட்டனர்.தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நாளுக்கு நாள் விபத்துகள் பெருகி வருகிறது. இதனால் ஆம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய தேவையாக உள்ளது. விபத்து நடக்கும் இடங்களுக்கு உடனடியாக செல்லும் வகையில் தொண்டி, எஸ்.பி.பட்டினம் பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.
நேற்று முன்தினம் தொண்டி பி.வி.பட்டினம் அருகே அரசு பஸ்சும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர். இரவு 7:00 மணிக்கு நடந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
எஸ்.பி.பட்டினத்திலிருந்து இரண்டு, தொண்டியிலிருந்து நான்கு தனியார் ஆம்புலன்ஸ்கள் சென்றன. அதன் டிரைவர்கள் மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக சிலரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் இரு வாகனங்களின் கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன. அவைகளை தொண்டி தனியார் டிராவல்ஸ் வேன் டிரைவர்கள் சென்று சுத்தப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களை துரிதமாக மீட்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

