/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதை தரும் வலி நிவாரணிமாத்திரை விற்றவர் கைது
/
போதை தரும் வலி நிவாரணிமாத்திரை விற்றவர் கைது
ADDED : ஜன 27, 2024 01:41 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை இன்றி விற்ற குமாரை 29, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் இளைஞர்கள் போதை மாத்திரையால் சீரழிந்து வருவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதை அடுத்து பஜார் ஸ்டேஷன் எஸ்.ஐ., ரமேஷ் தலைமையில் சவேரியார் கோயில் சர்ச் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரையான டேபெண்டோல் 50 எம்.ஜி., நீரிழிவு நோயாளிகள் நரம்பு பாதிப்பு காரணமாக ஏற்படும் வலிக்காக பயன்படுத்தப்படும் டைடோல் 50 எம்.ஜி., ஆகியவற்றை வைத்திருந்த அம்பேத்கர்நகரை சேர்ந்த கணேசன் மகன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

