ADDED : பிப் 23, 2024 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் அம்மாசி. இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் 2ம் நிலை போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரதீபா பெயரில் உள்ள வீட்டிற்கு மின் இணைப்பு கோரி சிக்கல் மின் வாரிய உதவிப்பொறியாளர் மலைச்சாமியை 49, தொடர்பு கொண்டார். அவர் ரூ.12 ஆயிரம் செலவாகும் எனவும், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.5192 போக மீதத்தொகை லஞ்சமாக வேண்டும் என்றார்.
நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்த மலைச்சாமி ரசாயனம் தடவிய ரூ.7000 ரூபாய் நோட்டுகளை அம்மாசியிடம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட மலைச்சாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீராம் உத்தரவிட்டார்.