/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் கூண்டில் மீன் பாசி வளர்ப்பு விழிப்புணர்வு
/
மண்டபத்தில் கூண்டில் மீன் பாசி வளர்ப்பு விழிப்புணர்வு
மண்டபத்தில் கூண்டில் மீன் பாசி வளர்ப்பு விழிப்புணர்வு
மண்டபத்தில் கூண்டில் மீன் பாசி வளர்ப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 23, 2025 07:35 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் மீனவர்களுக்கு கூண்டு வலையில் மீன், கடல் பாசி வளர்ப்பு குறித்து பயிற்சி நடந்தது.
புதுச்சேரி அரசு மீன்துறை சார்பில் மீனவர்களுக்கு கூண்டு முறையில் மீன், கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு நிதி வழங்கியுள்ளது. இதற்கான மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 நாட்கள் நடந்த இம்முகாமில் புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள், 4 மீன்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் கூண்டு முறையில் கடற்பாசி மற்றும் மீன்கள் வளர்க்கும் முறைகள், நோய் தடுப்பு மேலாண்மை, கடல் பாசி பதப்படுத்தி தொழிற்சாலைக்கு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல தகவல்களை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் கோபிநாத், மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி வினோத், விஞ்ஞானிகள் தமிழ்மணி, ஜான்சன், பவித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.