/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : ஜூன் 06, 2025 02:32 AM

கமுதி: கமுதி அருகே கீழவலசை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காளியம்மன், அய்யனார், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் சிறப்புபூஜை நடந்தது.
பேரையூரில் களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், கருப்பணசாமி, அய்யனார் உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் ஊர்வலமாக கீழவலசை கிராமத்திற்கு மக்கள் தூக்கி வந்தனர். பின் கடந்தாண்டு விளைந்த தானியங்களை வைத்து சிலைக்கு கண் திறப்பு செய்யப்பட்டது.
பக்தர்கள் அக்னிசட்டி, வேல்குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். குதிரை, தவழும் பிள்ளைகளை ஊர்வலமாக மலட்டாறு அணைக்கட்டு பகுதி காளியம்மன் கோயில் அருகில் வைத்து பூஜை செய்தனர்.