/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்களுக்கு புத்தக தானம் திட்டம் துவக்கம்
/
மாணவர்களுக்கு புத்தக தானம் திட்டம் துவக்கம்
ADDED : பிப் 05, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசு விடுதி மாணவர்கள் பயன்பெறும் புத்தக தானம், அறிவு தானம் என்ற புதிய திட்டத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் கியு.ஆர். கோடு மூலம் ரூ.1000 செலுத்தி துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது:
அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகத்திருவிழா அரங்கில் புத்தக தானம், அறிவு தானம் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதில் கிடைக்கும் பணத்தில் அரசு விடுதிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். மக்கள் இந்த கியு.ஆர். கோடை பயன்படுத்தி பணம் செலுத்தி புத்தகம் தானம் செய்ய வேண்டும் என்றார்.