/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செஸ் போட்டியில் வெற்றி டில்லி செல்கிறார் சிறுவன்
/
செஸ் போட்டியில் வெற்றி டில்லி செல்கிறார் சிறுவன்
ADDED : ஜூன் 02, 2025 10:25 PM

திருவாடானை: செஸ் போட்டியில் பல்வேறு விருதுகளை பெற்ற 10 வயது சிறுவன் டில்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்.
ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் சுகிர்தன் 10. காரைக்குடி கேந்திரவித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். செஸ் விளையாடுவதில் சுகிர்தன் ஆர்வமாக ஈடுபட்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். 2022ல் அழகப்பா மாதிரி பள்ளியில் நடந்த போட்டியில் 2ம் பரிசு பெற்றார்.
அதே ஆண்டில் சிவகங்கையில் எட்டு வயதிற்குட்பட்ட போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கோட்டையம், கொல்லம், திருவனந்தபுரம், மஹராஷ்ட்ரா, புனே போன்ற இடங்களில் கலந்து கொண்டு ரொக்கபரிசுகளை பெற்றார்.
தற்போது டில்லியில் திரிவோலி கார்டன் சத்தர்பூரில் ஜூன் 7 முதல் 14 வரை நடைபெறும் 21வது சர்வதேச சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்.