/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையீடு
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையீடு
ADDED : பிப் 29, 2024 10:21 PM
சாயல்குடி - சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையீடு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை நேரங்களில் பத்திரம் பதிவு செய்தல், சொத்து வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சாயல்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் புரோக்கர்களின் தலையீட்டால் ஏராளமான பத்திரங்கள் உடனடியாக பதிவு செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. சரியான ஆவணங்கள் இருந்தும் முறையான 'கவனிப்பு' இல்லாததால் பத்திரம் பதிவு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கேட்க வேண்டிய நடைமுறைகளை புரோக்கர்களின் தலையீட்டால் கையூட்டு கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. கலெக்டர் விஷ்ணு சந்திரன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

