/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் எரிந்த சவுக்கு மரங்கள்
/
தனுஷ்கோடியில் எரிந்த சவுக்கு மரங்கள்
ADDED : ஜூன் 01, 2025 10:54 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள சவுக்கு மரங்களுக்குள் திடீரென தீ பரவியதால் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் மேலும் பரவாமல் அணைத்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில், முகுந்தாராயர் சத்திரம் கடற்கரை இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அடர்ந்த சவுக்கு மரங்களில் தீடீரென காட்டுத் தீ பரவி எரியத் துவங்கியது.
வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இரண்டு மணி நேரம் போராடி அணைத்தனர்.
தீ பிடித்தது எப்படி
தனுஷ்கோடிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலோரத்தில் உள்ள சவுக்கு மரங்களுக்கு இடையே அமர்ந்து உணவை சாப்பிட்டு செல்கின்றனர். இதில் சிலர் புகைபிடிப்பதால் மரத்தில் தீப்பிடித்து இருக்கலாம். எனவே சுற்றுலா பயணிகள் எரியும் பொருட்களை இப்பகுதியில் பயன்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தினர்.