ADDED : ஜூன் 13, 2025 11:37 PM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் வாகனங்களில் ஏர்ஹாரன்களை பொருத்தி அதிக ஒலி எழுப்பி செல்கின்றனர். போக்குவரத்தில் பதட்டம் ஏற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த ரோடுகளில் சில வாகன ஓட்டுநர்களின் செயல் பதட்டத்தையும் விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக இளைஞர்கள் டூவீலர்களில் செல்லும் போது சைலன்சர்களை மாட்டி அதிக சத்த்துடன் செல்கின்றனர். குடியிருப்பு வழியாக திடீரென எழும் அதிக சத்தம் காரணமாக ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டுநர்களும், ரோட்டோரத்தில் நடந்து செல்பவர்களும், வீடுகளில் உள்ளோரும் பதறும் அளவுக்கு, இந்த ஒலிச்சத்தம் இருக்கிறது.
மருத்துவமனைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதியிலும் விதிமீறல் உள்ளது. சில தனியார் பஸ், சரக்கு வாகனங்களிலும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.