/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
ADDED : ஜூன் 14, 2025 11:15 PM
சாயல்குடி,: சாயல்குடியில் ஆர்.டபிள்யு.டி.எஸ்., தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆர்.டபிள்யு.டி.எஸ்., இயக்குனர் சாத்தையா தலைமை வகித்தார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் அழகுவேல் பாண்டி, எஸ்.ஐ., மலைராஜ், கீழ அல்லிகுளம் கிராம தலைவர் தங்கவேல், பெரியநாயகிபுரம் அந்தோணி லாரன்ஸ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் முத்துச்செல்வி, மாநில பனைத் தொழிலாளர் சங்க நிர்வாகி அந்தோணியார் ராயப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் காணொளி மூலமாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு உதவ வேண்டாம், என்றும் குழந்தைக்கு தேவை புத்தகங்கள், வேலை, கருவிகள் அல்ல என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிரசாரத்தில் அரசுத் துறை சார்ந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள், வளரிளம் குழந்தைகள் குழு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.