/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொது கழிப்பறை வளாகம் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
/
பொது கழிப்பறை வளாகம் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
பொது கழிப்பறை வளாகம் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
பொது கழிப்பறை வளாகம் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : மார் 21, 2025 06:18 AM
ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை ஊராட்சியில் 2004ல் திறக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பாட்டிற்காக 10 சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கழிப்பறை வளாகத்தை ஒப்பந்ததாரர் நேற்று முன்தினம் இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஏன் பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்தை இடிக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதி இடிக்கப்பட்ட நிலையில் சுகாதார வளாகத்தை இடிக்கும் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
பத்திராதரவை கிராம மக்கள் கூறியதாவது:
பயன்பாட்டில் இருந்த கழிப்பறை வளாகத்தை கிராம மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இடிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. எனவே பாதி இடிக்கப்பட்டதுடன் நிறுத்தப்பட்ட கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு தரமாக கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் கோரிக்கையை கேட்காமல் தன்னிச்சையாக லாப நோக்கத்தில் அரசு கட்டடத்தை கட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.