/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் நோய் பாதித்த நாய்கள்
/
முதுகுளத்துாரில் நோய் பாதித்த நாய்கள்
ADDED : ஜூன் 13, 2025 11:33 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் தோல் உரிந்த நிலையில் நாய்கள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தெருக்களில் கூட்டமாக நாய்கள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்ததில் 2 வயது குழந்தை காயமடைந்துள்ளது.10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிட்டும் பேரூராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுகின்றனர். அது மட்டும் இல்லாமல் தோல் உரிந்த நிலையில் நோய் பரப்பும் வகையில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. இதனால் ஏதாவது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே முதுகுளத்துாரில் நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.