/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.58 கோடி காணிக்கை
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.58 கோடி காணிக்கை
ADDED : பிப் 01, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், --ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில்செலுத்திய காணிக்கை மூலம் ரூ.1.58 கோடி வருவாய் கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர்சிவராம்குமார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் திறந்து காணிக்கைகளை சேகரித்தனர்.
இவற்றை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்கம் 1 கோடியே 58 லட்சத்து 38 ஆயிரத்து 347 ரூபாய், தங்கம் 70 கிராம், வெள்ளி 12 கிலோ 890 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
இந்த காணிக்கையை கோயில் ஊழியர்கள், சிவனடியார் பக்தர்கள் எண்ணினார்கள்.

