/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் இரட்டை மடியில் மீன்பிடிப்பு: 24 படகுகள் மீது வழக்கு
/
ராமேஸ்வரத்தில் இரட்டை மடியில் மீன்பிடிப்பு: 24 படகுகள் மீது வழக்கு
ராமேஸ்வரத்தில் இரட்டை மடியில் மீன்பிடிப்பு: 24 படகுகள் மீது வழக்கு
ராமேஸ்வரத்தில் இரட்டை மடியில் மீன்பிடிப்பு: 24 படகுகள் மீது வழக்கு
ADDED : ஜன 10, 2024 12:17 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடியில் மீன்பிடித்த 24 விசைப்படகுகள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்தனர்.
கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டைமடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஜன.8ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் பெரும்பாலானோர் தடை செய்த இரட்டைமடியில் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மீன்துறையினர் நேற்று படகுகள் மற்றும்
மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை ஆய்வு செய்தனர்.
இதில் இரட்டைமடியில் மீன்பிடித்ததை உறுதிப்படுத்திய மீன்துறை அதிகாரிகள் இந்த வலையில் மீன்பிடித்த 24 விசைப்படகுகள் மீது வழக்கு பதிந்து நாளை (ஜன.10) முதல் இப்படகிற்கு மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கன் ரத்து செய்யப்பட்டது.
இப்படகிற்கு அபராதம் ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் முடிவு செய்வார் என மீன்துறையினர் தெரிவித்தனர்.