/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய விவசாயிகள்
/
ராமநாதபுரத்தில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய விவசாயிகள்
ராமநாதபுரத்தில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய விவசாயிகள்
ராமநாதபுரத்தில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய விவசாயிகள்
ADDED : ஜன 17, 2024 12:37 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் மாட்டுப்பொங்கல் விழாவிற்காக சித்தனேந்தல்பகுதியில் கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து அவற்றை விவசாயிகள் வணங்கினர்.
கிராமப்புறங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கின்றனர். முன்பெல்லாம் காளைகள் தான் கிராமப்புறங்களில் வளர்ப்பார்கள்.
காளைகளை விவசாயம்சார்ந்த உழவு, சரக்கு எடுப்பற்காக மாட்டு வண்டியில் பயன்படுத்துவார்கள்.
தற்போது நவீனமயமானதால் காளைகளின் பணிகளை டிராக்டர் செய்கிறது.
இதன் காரணமாக மாட்டுப்பொங்கல் அன்று விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, உடலில் கலர் பொடிகளால் அலங்காரம் செய்து வணங்கும் பணியில் ஈடுபடுவார்கள். நேற்று மாட்டுபொங்கலை முன்னிட்டு சித்தனேந்தல் பகுதியில் உள்ள கீழநாட்டார்
கால்வாய் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்கு செல்லும்வழியில் விவசாயிகள் தங்களது பசுமாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.-------
இதுபோல மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உச்சிப்புளி அருகே அரியமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கோ பூஜை நடந்தது. பசுகளுக்கு கரும்பு, பொங்கல் வழங்கப்பட்டது.

