/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காப்பீட்டுதொகை குறைவாக வந்துள்ளது புல்லந்தை கிராம விவசாயிகள் புகார்

ADDED : ஜூன் 10, 2025 01:02 AM

ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா மாயாகுளம் அருகேயுள்ள புல்லந்தை கிராம விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை குறைவாக வந்துள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
புல்லந்தை கிராம விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில் காப்பீட்டு தொகை எங்கள் கிராமத்திற்கு ஏக்கருக்கு ரூ.1500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அருகேயுள்ள ஏர்வாடி, சிக்கல், பன்னந்தை உள்ளிட்ட கிராமங்களில் ரூ.6000 முதல் ரூ.20ஆயிரம் வரை காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கியுள்ளனர். புல்லந்தை கிராமம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.
பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு வழிகாட்டு நெறிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி உரிய இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும்.
கிராமத்தில் தெருவிளக்குகள் எரியவில்லை, சரிசெய்ய வேண்டும். பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.