ADDED : ஜன 10, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி அருகே அஞ்சலக பெண் அதிகாரி திருமணமான ஒன்றரை ஆண்டில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்தார்.
சாயல்குடி அருகே வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். நிதி நிறுவனம் நடத்துகிறார். இவரது மனைவி விநாயக செல்வி 23. இவர் மாரியூர் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது கடந்த சில நாட்களாக விநாயக செல்வி வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்தார். இவரது தந்தை தங்கவேல் புகாரில் சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

