/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்! குளிர்கால சீசனை அனுபவிக்க வந்து குவிகின்றன
/
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்! குளிர்கால சீசனை அனுபவிக்க வந்து குவிகின்றன
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்! குளிர்கால சீசனை அனுபவிக்க வந்து குவிகின்றன
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்! குளிர்கால சீசனை அனுபவிக்க வந்து குவிகின்றன
ADDED : பிப் 29, 2024 10:15 PM

ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்ட பிளமிங்கோ பறவைகள் குளிர் கால சீசனை அனுபவிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலை சுற்றிலும் பல ஏக்கரில் நீர் பிடிப்பு பகுதி உள்ளது.
இங்கு சிறிய ரக மீன் குஞ்சுகள், நண்டுகள், இறால்கள் அதிகளவில் வளரும். தனுஷ்கோடி பகுதியில் ஜன., முதல் மார்ச் வரை பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மாலை 4:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை குளிர் நிலவும்.
இந்த குளிர் சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் பிளமிங்கோ பறவைகள் இங்கு வருவது வழக்கம். இந்த ஆண்டில் தற்போது அதிக பனிப்பொழிவு உள்ள நிலையில் சில நாள்களுக்கு முன் வந்த ஏராளமான பிளமிங்கோ பறவைகள் இங்கு குவிந்துள்ளன.
இவை இங்குள்ள மீன் குஞ்சுகளை உட்கொண்டு அருகில் உள்ள அடர்ந்த சவுக்கு மரக்காடுகளுக்குள் கூடுகட்டில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். 2 அடி உயரம் கொண்ட இப்பறவைகள் பறந்தால் 4 அடி அகலத்தில் பிங்க் நிறத்தில் உள்ளன.
தற்போது இப்பறவைகள் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் இருந்து 1 கி.மீ., தொலைவில் அதிகமாக வந்துள்ளன. இவை நீண்ட தொலைவில்கடல் நீர் தேங்கும் பகுதியில் இருப்பதால் சுற்றுலாபயணிகளால் தெளிவாக கண்டு ரசிக்க முடிவதில்லை. இதனால் பல நேரங்களில் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதனை தவிர்க்க இங்கு டெலஸ்கோப் வசதி செய்ய வேண்டும், என சுற்றுலாப்பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

