/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் திருடிய நகராட்சி பணியாளர்கள் 4 பேர் கைது இருவர் சஸ்பெண்ட்

ADDED : ஜூலை 05, 2025 02:50 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரத்தை திருடி விற்றதாக கைது செய்யப்பட்ட நகராட்சி பணியாளர்கள் நான்கு பேரில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான கலவை உரக்கிடங்கு பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ளது. இங்குள்ள குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீயில் சேதமடைந்து பயன்பாடின்றி கிடந்தது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீஜெஸ்குமார் அங்கு சென்ற போது அந்த இயந்திரம் காணாமல் போனது. அதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் என கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், அதனை திருடி விற்றதாக நகராட்சி மேற்பார்வையாளர்களான சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர்., நகர் ஆனந்தன் 50, மீனாட்சிபுரம் காலனி காளிமுத்து 51, பணியாளர் சிறுவயல் பாலகிருஷ்ணன், மணல் அள்ளும் இயந்திரத்தின் ஆப்பரேட்டர் பச்சைமால் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் மேற்பார்வையாளர்கள் ஆனந்தன், காளிமுத்து ஆகியோரை நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வீன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.