/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நரிப்பையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியில் இணைத்தால் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு தகவல்

ADDED : பிப் 05, 2024 11:19 PM

சாயல்குடி -சாயல்குடி பேரூராட்சியுடன் 9 கி.மீ.,ல் உள்ள நரிப்பையூர் ஊராட்சியை இணைக்க கூடாது. அவ்வாறு இணைத்தால் தொடர் போராட்டங்கள் நடக்கும் என ஒருங்கிணைப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நரிப்பையூர் ஊராட்சி சார்பில் சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க முன்னாள் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:
நரிப்பையூர் ஊராட்சியில் 10 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். முக்கிய தொழிலாக விவசாயம், பனைத் தொழில், மீன்பிடித்தல் நடக்கிறது. நரிப்பையூர் ஊராட்சியாக இருப்பதால் ஊராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகள் மூலம் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.
இதனை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைப்பதில் ஊராட்சி மக்களுக்கு உடன்பாடு கிடையாது.100 நாள் வேலை திட்டம் பறிபோகும். சொத்து வரி, தண்ணீர் வரி, வீட்டு வரிக்கு அதிக தொகை செலுத்த நேரிடும். வீடு கட்டுவதற்கு முன் அனுமதி பெற நீண்ட கால தாமதம் ஏற்படும்.
மத்திய அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி கிடைக்காது. இதனால் நரிப்பையூர் ஊராட்சியின் பெயர் நாளடைவில் மறைந்து விடும்.
எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்களை திரட்டி தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும்.
இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், கடலாடி பி.டி.ஓ., உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவில் சென்னை சென்று துறை அமைச்சர் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.