/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் இயந்திரம் திறப்பு விழா
/
அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் இயந்திரம் திறப்பு விழா
அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் இயந்திரம் திறப்பு விழா
அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் இயந்திரம் திறப்பு விழா
ADDED : ஜன 28, 2024 04:29 AM
கமுதி :கமுதி அரசு மருத்துவமனையில் அதானி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் அறக்கட்டளை சார்பில் கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
மருத்துவபணிகள் மாவட்ட இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தரக்கட்டுப்பாடு அலுவலர் ரமேஷ் ராம்நாத், தலைமை டாக்டர் விஜயா, சோலார் நிறுவன தலைமை அதிகாரி ஆராமுதன் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள், நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.4 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் ரூ.10 லட்சத்தில் கழிப்பறை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதே போன்று பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.4 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
உடன் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.