/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை பூஜை
/
முருகன் கோயில்களில் கார்த்திகை பூஜை
ADDED : மே 26, 2025 09:37 PM

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வைகாசி மாத மகார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு 11 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அர்ச்சகர் விஸ்வநாதன் பூஜைகளை செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
* கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் உள்ள செந்தில் முருகன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை உத்தரகோசமங்கை அர்ச்சகர் நாகராஜன் செய்திருந்தார்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் விஜயகுமார் தலைமையில் விழாக் குழுவினர் மற்றும் மனுமயா இளைஞர் கொல் தச்சு தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
--