/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழத்துாவலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ முகாம்
/
கீழத்துாவலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ முகாம்
ADDED : ஜன 26, 2024 05:20 AM

முதுகுளத்துார்; -முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார டாக்டர் நெப்போலியன் தலைமை வகித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவ குழு டாக்டர் யமுனா முன்னிலை வகித்தார்.
தொற்று நோய், கர்ப்ப வாய், மார்பக புற்றுநோய், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு உள்ளிட்ட பொது மருத்துவம் குறித்து நோயாளிகளுக்கு பரிசோதனை, ஆலோசனைகளை டாக்டர்கள் வழங்கினர்.
கே.ஆர்.பட்டணம், மகிண்டி, விளங்குளத்துார், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

