sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில்களில் நடந்த பால்குடம் ஊர்வலம்

/

கோயில்களில் நடந்த பால்குடம் ஊர்வலம்

கோயில்களில் நடந்த பால்குடம் ஊர்வலம்

கோயில்களில் நடந்த பால்குடம் ஊர்வலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே விரதகுளம் கிராமத்தில் வாழவந்த அம்மன் கோயில் பொங்கல் முளைப்பாரி விழா ஒரு மாதத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.

வாழவந்த அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக அரியநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். பின்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மாலை முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar