/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மங்கம்மாள் சாலையில் மினி பஸ் இயக்கம்
/
மங்கம்மாள் சாலையில் மினி பஸ் இயக்கம்
ADDED : ஜூன் 23, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் இருந்து ஆற்றங்கரை செல்லும் மங்கம்மாள் சாலை வழியாக மினி பஸ் இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பயனடைந்தனர். மங்கம்மாள் சாலை வழித்தடத்தில் நவபாஷாண கோயில், உலகம்மாள் கோயில், சித்தார் கோட்டை, புதுவலசை, அம்பலம் கஜிதா நகர், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து மினி பஸ் இயக்கப்பட்டு வருவதால் பல ஆண்டுகளாக பஸ் வசதி இன்றி சிரமப்பட்டு வந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் பஸ் இயக்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.