/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சென்டர் மீடியன் இல்லை: விபத்துகள் அதிகரிப்பு
/
சென்டர் மீடியன் இல்லை: விபத்துகள் அதிகரிப்பு
ADDED : ஜூன் 26, 2025 12:56 AM
திருவாடானை: மதுரை-- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே சென்டர் மீடியன் இல்லாமல் விபத்துக்கள் அதிகரிப்பதால் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
மதுரை- தொண்டி சாலையில் திருவாடானை தாலுகா அலுவலகம் எதிரில் வளைவான சாலை உள்ளது. இச்சாலை திறந்த வெளியாக இருப்பதால் வாகனங்கள் வேகமாகவும், தாறுமாறாகவும் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் தொண்டியிலிருந்து திருவாடானை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனை சுவற்றில் மோதியது.
காருக்கு பின்னால் டூவீலர்களில் வந்தவர்கள் அடுத்தடுத்து மோதியதில் சிலர் காயமடைந்தனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
இதை தடுக்க சாலையின் மையப் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.