/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'கால் யுவர் கலெக்டர்' திட்டத்தில் திருப்தி இல்லை
/
'கால் யுவர் கலெக்டர்' திட்டத்தில் திருப்தி இல்லை
ADDED : ஜூலை 23, 2024 11:17 PM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 'கால் யுவர் கலெக்டர்' (உங்கள் கலெக்டரை அழைக்கவும்) என்ற திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 83001 75888 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் குறைகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த வசதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுதாரர்கள் உடல் ரீதியாக ஆஜராக முடியாதவர்கள் பயன்பெறும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் கூறும் குறைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதாரருக்கு உரிய பதில் தாமதமின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தினமும் இந்த அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கின்றனர். ஆனால் குறைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், இத்திட்டம் நல்ல திட்டமாகும். அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை கூறும் போது பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பதில் இல்லை.
சம்பந்தப்பட்ட துறைக்கு குறைகள் தெரிவிக்கப்பட்டதா என்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ள இத்திட்டம் சிறப்பாக செயல்பட புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.